குறள் 516

தெரிந்துவினையாடல்

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்

seivaanai naati vinainaatik kaalaththodu
yeitha unarndhthu seyal


Shuddhananda Bharati

Testing and entrusting

Discern the agent and the deed
And just in proper time proceed.


GU Pope

Selection and Employment

Let king first ask, 'Who shall the deed perform?' and 'What the deed?'
Of hour befitting both assured, let every work proceed.

Let (a king) act, after having considered the agent (whom he is to employ), the deed (he desires todo), and the time which is suitable to it.


Mu. Varadarajan

செய்கின்றவனுடைய தன்மையை ஆராய்ந்து, செயலின்‌ தன்மையையும்‌ ஆராய்ந்து, தக்க காலத்தோடு பொருந்துமாறு உணர்ந்து செய்விக்க வேண்டும்‌.


Parimelalagar

செய்வானை நாடி-முதற் கண்ணே செய்வானது இலக்கணத்தை ஆராய்ந்து, வினை நாடி-பின் செய்யப்படும் வினையினது இயல்பை ஆராய்ந்து; காலத்தொடு எய்த உணர்ந்து செயல்-பின் அவனையும் அதனையும் காலத்தோடு படுத்துப் பொருந்த அறிந்து அவனை அதன்கண் ஆடலைச் செய்க.
விளக்கம்:
[செய்வானது இலக்கணமும் வினையினது இயல்பும் மேலே கூறப்பட்டன. காலத்தொடு எய்த உணர்தலாவது, இக்காலத்து இவ்விலக்கணமுடையான் செய்யின் இவ்வியல் பிற்றாய வினை முடியும் என்று கூட்டி உணர்தல்.]


Manakkudavar

(இதன் பொருள்) வினை செய்வானையும் ஆராய்ந்து, அவ்வினையினது இயல்பையும் ஆராய்ந்து, அது முடியுங் காலத்தோடே பொருந்த அறிந்து, பின்பு அவ்லினை அவன் செய்வானாக அமைக்கவேண்டும்,
(என்றவாறு).