குறள் 514

தெரிந்துவினையாடல்

எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்

yenaivakaiyaan thaeriyak kannum vinaivakaiyaan
vaeraakum maandhthar palar


Shuddhananda Bharati

Testing and entrusting

Though tried and found fit, yet we see
Many differ before duty.


GU Pope

Selection and Employment

Even when tests of every kind are multiplied,
Full many a man proves otherwise, by action tried!

Even when (a king) has tried them in every possible way, there are many men who change, from the nature of the works (in which they may be employed).


Mu. Varadarajan

எவ்வகையால்‌ ஆராய்ந்து தெளிந்த பிறகும்‌ (செயலை மேற்கொண்டு செய்யும்போது அச்‌ செயல்வகையால்‌ வேறுபடும்‌ மக்கள்‌ உலகத்தில்‌ உண்டு.


Parimelalagar

எனை வகையான் தேறியக் கண்ணும்-எல்லா வகையானும் ஆராய்ந்து தெளிந்து வினைவைத்த பின்னும்; வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர் - அவ் வினையின் இயல்பானே வேறுபடும் மாந்தர் உலகத்துப் பலர்.
விளக்கம்:
[கட்டியங்காரன்போல அரச இன்பத்தினை வெஃகி விகாரப்படுவதல்லது, அதனைக் குற்றம் என்று ஒழிந்து தம் இயல்பின் நிற்பார் அரியர் ஆகலின், 'வேறாகும் மாந்தர் பலர்' என்றார். வினை வைப்பதற்கு முன் எல்லாக் குணங்களும் உடையராய், வைத்தபின் விகாரப்படுவாரை இடையாயதொரு வினையை வைத்து அறிந்து ஒழிக்க என்பதாம். இதனான் ஒரு வகையால் ஒழிக்கப்படுவார் இவர் என்பது கூறப்பட்டது.]


Manakkudavar

(இதன் பொருள்) எல்லா வகையினாலும் ஆராய்ந்து தெளிந்தவிடத்திலும், அவர் செய்யும் வினையின் வகையினாலே மனம் வேறுபடும் மாந்தர் உலகத்துப் பலர், ( ) இது தெளிந்தே மென்று இகழலாகாதென்றது.