Kural 511
குறள் 511
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்
nanmaiyum theemaiyum naati nalampurindhtha
thanmaiyaan aalap padum
Shuddhananda Bharati
Employ the wise who will discern
The good and bad and do good turn.
GU Pope
Who good and evil scanning, ever makes the good his joy;
Such man of virtuous mood should king employ.
He should be employed (by a king), whose nature leads him to choose the good, after havingweighed both the evil and the good in any undertaking.
Mu. Varadarajan
நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான்.
Parimelalagar
நன்மையும் தீமையும் நாடி-அரசன் முதற்கண் ஒரு வினையைத் தன்கண் வைத்தால், அதன்கண் ஆவனவும் ஆகாதனவும் ஆய செயல்களை ஆராய்ந்து அறிந்து; நலம் புரிந்த தன்மையான்-அவற்றுள் ஆவனவற்றையே விரும்பிய இயல்பினையுடையான்; ஆளப்படும். பின் அவனால் சிறந்த வினைகளிலே ஆளப்படும்.
விளக்கம்:
[தன்னை உரிமை அறிதற்பொருட்டு அகம் புறங்கட்கு நடுவாயதோர் வினையை அரசன் தன்கண் வைத்த வழி, அதன் கண் ஆம் செயல்களையே செய்தவன் பின்னும் அவ்வியல்பினனாதல் பற்றி, அகமாய வினைக்கண்ணே ஆளப்படுவன் என்பதாயிற்று. 'புரிந்த' என்ற இறந்த காலத்தான், முன் உரிமை அறிதற்பொருட்டு வைத்த வினையாதல் பெற்றாம்.]
Manakkudavar
தெரிந்து வினையாடலாவது வினை செய்வாரால் செய்யப்படும் வினையும் பல்வாதலின், அவரால் செய்யப்படும் வினைகளை யறிந்து அவரை விட்டுச் செய்வித்தல். (இதன் பொருள்) நன்மையானவற்றையும் தீமையானவற்றையும் ஆராய்ந்து, தீமை யைப் பொருந்தாது நன்மையின்கண்ணே பொருந்தின் தன்மையுடையவன் வினை செய்வனாகச் செய்யப்படும்,
(என்றவாறு)