குறள் 510

தெரிந்துதெளிதல்

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்

thaeraan thaelivum thaelindhthaankan aiyuravum
theeraa idumpai tharum


Shuddhananda Bharati

Testing of men for confidence

Trust without test; The trusted doubt;
Both entail troubles in and out.


GU Pope

Selection and Confidence

Trust where you have not tried, doubt of a friend to feel,
Once trusted, wounds inflict that nought can heal.

To make choice of one who has not been examined, and to entertain doubts respecting one who has been chosen, will produce irremediable sorrow.


Mu. Varadarajan

ஒருவனை ஆராயாமல்‌ தெளிவடைதலும்‌, ஆராய்ந்து தெளிந்த ஒருவனிடம்‌ ஐயப்படுதலும்‌ ஆகிய இவை நீங்காத துன்பத்தைக்‌ கொடுக்கும்‌.


Parimelalagar

தேரான் தெளிவும்-அரசன் ஒருவனை ஆராயாது தெளிதலும்; தெளிந்தான்கண் ஐயுறவும்-ஆராய்ந்து தெளிந்தவன்மாட்டு ஐயப்படுதலும், இவ்விரண்டும்; தீரா இடும்பை தரும்-அவனுக்கு நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.
விளக்கம்:
[வினை வைத்த பின் ஒரு தவறு காணாது வைத்து ஐயுறுமாயின், அதனை அவன் அறிந்து, 'இனி இது நில்லாது' என்னும் கருத்தான் அவ்வினையை நெகிழ்த்து விடும்; அதுவேயன்றிப் பகைவரால் எளிதில் பிரிக்கவும் படும். ஆதலால் தெளிந்தான்கண் ஐயுறவும் ஆகாதாயிற்று. தெளிவிற்கு எல்லை கூறியவாறு இவை ஐந்து பாட்டானும், தெளியப்படாதார் இவர் என்பதூஉம், அவரைத் தெளிந்தால் படும் இழுக்கும், தெளிவிற்கு எல்லையும் கூறப்பட்டன.]


Manakkudavar

(இதன் பொருள்) ஒருவனை ஆராயாது தெளிதலும் தெளிந்து கொள்ளப்பட்டவன் மாட்டுத் தான் ஐயப்படுதலுமாகிய இவ்விரண்டும் நீங்காத துன்பத்தைத் தரும்.