குறள் 51

வாழ்க்கைத் துணைநலம்

மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை

manaikthakka maanputaiyal aakiththatr kontaan
valaththakkaal vaalkkaith thunai


Shuddhananda Bharati

The worth of a wife

A good housewife befits the house,
Spending with thrift the mate's resource.


GU Pope

The Goodness of the Help to Domestic Life

As doth the house beseem, she shows her wifely dignity;
As doth her husband's wealth befit, she spends: help - meet is she.

She who has the excellence of home virtues, and can expend within the means of her husband, is a help in the domestic state.


Mu. Varadarajan

இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித்‌ தன்‌ கணவனுடைய பொருள்‌ வளத்துக்குத்‌ தக்க வாழ்க்கை நடத்துகின்றவளே வாழ்க்கைத்‌ துணை ஆவாள்‌.


Parimelalagar

மனைத் தக்க மாண்பு உடையளாகித் தன் கொண்டான் வளத்தக்காள்-மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகளை உடையவளாய்த் தன்னைக் கொண்டவனது வருவாய்க்குத் தக்க வாழ்க்கையை உடையாள்; வாழ்க்கைத் துணை-அதற்குத் துணை. நற்குணங்களாவன: துறந்தார்ப் பேணலும், விருந்து அயர்தலும், வறியார்மாட்டு அருளுடைமையும் முதலாயின.
விளக்கம்:
(நற்செய்கைகளாவன: வாழ்க்கைக்கு வேண்டும் பொருள்கள் அறிந்து கடைப்பிடித்தலும், அட்டில் தொழில் வன்மையும், ஒப்புரவு செய்தலும் முதலாயின. வருவாய்க்குத் தக்க வாழ்க்கையாவது: முதலை அறிந்து அதற்கு இயைய அழித்தல். இதனால் இவ்விரண்டு நன்மையும் சிறந்தன என்பது கூறப்பட்டது.)


Manakkudavar

வாழ்க்கைத் துணைநலமாவது வாழ்க்கைக்குத் துணையாகிய மனையாளது பெண்மை யிலக்கணங் கூறுதல். (இதன் பொருள்) தான் பிறந்த குடிக்குத்தக்க வொழுக்கத்தை யுடையாளாய்த் தன்னைக் கொண்டவனது வருவாய்க்குத் தக்க செல்லவினையுடையவள் இல் வாழ்க்கைக்குத் துணையாவள்,
(என்றவாறு).