குறள் 50

இல்வாழ்க்கை

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும்
தெய்வத்துள் வைக்கப் படும்

vaiyaththul vaalvaangku vaalpavan vaanunatryum
thaeivaththul vaikkap padum


Shuddhananda Bharati

Married Life

He is a man of divine worth
Who lives in ideal home on earth.


GU Pope

Domestic Life

Who shares domestic life, by household virtues graced,
Shall, mid the Gods, in heaven who dwell, be placed.

He who on earth has lived in the conjugal state as he should live, will be placed among the Gods who dwell in heaven.


Mu. Varadarajan

உலகத்தில்‌ வாழவேண்டிய அறநெறியில்‌ நின்று வாழ்கின்றவன்‌, வானுலகத்தில்‌ உள்ள தெய்வமுறையில்‌ வைத்து மதிக்கப்படுவான்‌.


Parimelalagar

வாழ்வாங்கு வையத்துள் வாழ்பவன்-இல்லறத்தோடு கூடி வாழும் இயல்பினால் வையத்தின்கண் வாழ்பவன்; வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்-வையத்தானே எனினும் வானின்கண் உறையும் தேவருள் ஒருவனாக வைத்து நன்கு மதிக்கப்படும்.
விளக்கம்:
(பின் தேவனாய் அவ்வறப்பயன் நுகர்தல் ஒருதலை யாகலின், 'தெய்வத்துள் வைக்கப்படும்' என்றார். இதனான் இல்நிலையது மறுமைப்பயன் கூறப்பட்டது. இம்மைப் பயன் புகழ்; அதனை இறுதிக்கண் கூறுப.)


Manakkudavar

(இதன் பொருள்) இல்வாழ்க்கை வாழும்படியிலே வாழும் வன் உலகத்திலே தேவ ருள் ஒருவனாக மதிக்கப்படுவன்,
(என்றவாறு). இவன் எல்லாராலும் நன்கு மதிக்கப்படுவ னென்றவாறு.