குறள் 49

இல்வாழ்க்கை

அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று

aranyenap patdathae ilvaalkkai akhthum
piranpalippa thillaayin nanru


Shuddhananda Bharati

Married Life

Home-life and virtue, are the same;
Which spotless monkhood too can claim.


GU Pope

Domestic Life

The life domestic rightly bears true virtue's name;
That other too, if blameless found, due praise may claim.

The marriage state is truly called virtue. The other state is also good, if others do not reproach it.


Mu. Varadarajan

அறம்‌ என்று சிறப்பித்துச்‌ சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும்‌; அதுவும்‌ மற்றவன்‌ பழிக்கும்‌ குற்றம்‌ இல்லாமல்‌ விளங்கினால்‌ மேலும்‌ நன்மையாகும்‌.


Parimelalagar

அறன் எனப்பட்டது இல்வாழ்க்கை-இருவகை அறத்தினும் நூல்களான் அறன் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது. இல்வாழ்க்கையே; அஃதும் பிறன் பழிப்பது இல்லாயின் நன்று-ஏனைத் துறவறமோ எனின், அதுவும் பிறனால் பழிக்கப்படுவது இல்லையாயின், அவ்வாழ்க்கையோடு ஒரு தன்மைத்தாக நன்று.
விளக்கம்:
(ஏகாரம் பிரிநிலைக்கண் வந்தது. இதனால் பிரிக்கப்பட்டது துறவறம் ஆதலின், 'அஃது' என்னும் சுட்டுப் பெயர் அதன்மேல் நின்றது. 'பிறன் பழிப்பது' என்றது கூடாவொழுக்கத்தை. துறவறம் மனத்தையும பொறிகளையும் ஒறுத்து அடக்கவல்ல அருமையுடைத்தாய வழியே, அவற்றை ஒறுக்க வேண்டாது ஐம்புல இன்பங்கள் ஆரத் துய்க்கும் மென்மையுடைய இல்வாழ்க்கையோடு அறம் என ஒருங்கு எண்ணப்படுவது என்றவாறு ஆயிற்று. இவை நான்கு பாட்டானும் இல்நிலையே பயனுடைத்து என இதன் சிறப்புக் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) அறனென்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே; அதுவும் நன்றாவது பிறனொருவனாற் பழிக்கப்படுவதொன்றை யுடைத்தல்ல வாயின்,
(என்றவாறு). பழிக்கப்படுவதென்றது இழிகுலத்தாளாகிய மனையாளை. இனி வாழ்க்கைத் துணைநலங் கூறுகின்றாராகலின், இது கூறப்பட்டது. 10