குறள் 48

இல்வாழ்க்கை

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து

aatrrin olukki aranilukkaa ilvaalkkai
notrpaarin nonmai utaiththu


Shuddhananda Bharati

Married Life

Straight in virtue, right in living
Make men brighter than monks praying.


GU Pope

Domestic Life

Others it sets upon their way, itself from virtue ne'er declines;
Than stern ascetics' pains such life domestic brighter shines.

The householder who, not swerving from virtue, helps the ascetic in his way, endures more than those who endure penance.


Mu. Varadarajan

மற்றவரையும்‌ அறநெறியில்‌ ஒழுகச்‌ செய்து, தானும்‌ அறம்‌ தவறாத இல்வாழ்க்கை, தவம்‌ செய்வாரைவிட மிக்க வல்லமை உடைய வாழ்க்கையாகும்‌.


Parimelalagar

ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை-தவஞ் செய்வாரையும் தத்தம் நெறியின்கண் ஒழுகப் பண்ணித் தானும் தன் அறத்தின் தவறாத இல்வாழ்க்கை; நோற்பாரின் நோன்மை உடைத்து-அத் தவஞ்செய்வார் நிலையினும் பொறையுடைத்து.
விளக்கம்:
(பசி முதலிய இடையூறு நீக்கலின், 'ஆற்றின் ஒழுக்கி' என்றார். 'நோற்பார்' என்பது ஆகுபெயர். நோற்பார் நிலைக்கு அவர்தம்மை உற்ற நோயல்லது இல்வாழ்வார் நிலைபோல் பிறரை உற்ற நோயும் பொறுத்தல் இன்மையின், 'நோற்பாரின் நோன்மையுடைத்து' என்றார்.)


Manakkudavar

(இதன் பொருள்) பிறரையும் நன்னெறியிலே ஒழுகப்பண்ணித் தானும் அறத்தின் பாலொழுகும் இல்வாழ்க்கை தவஞ்செய்வாரினும் வலியுடைத்து,
(என்றவாறு). ஒழுகப் பண்ணலாவது அவர்க்கு வேண்டுவன அமைத்தல். இது தவத் தினும் வலியுடைத்தென்றது.