குறள் 47

இல்வாழ்க்கை

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை

iyalpinaan ilvaalkkai vaalpavan yenpaan
muyalvaarul yellaam thalai


Shuddhananda Bharati

Married Life

Of all who strive for bliss, the great
Is he who leads the married state.


GU Pope

Domestic Life

In nature's way who spends his calm domestic days,
'Mid all that strive for virtue's crown hath foremost place.

Among all those who labour (for future happiness) he is greatest who lives well in the household state.


Mu. Varadarajan

அறத்தின்‌ இயல்போடு இல்வாழ்க்கை வாழ்கின்றவன்‌- வாழ முயல்கின்றவன்‌ பல திறத்தாரிலும்‌ மேம்பட்டு விளங்குகின்றவன்‌ ஆவான்‌.


Parimelalagar

இல் வாழ்க்கை இயல்பினான் வாழ்பவன் என்பான்-இல்வாழ்க்கைக்கண் நின்று அதற்கு உரிய இயல்போடு கூடி வாழ்பவன் என்று சொல்லப்படுவான்; முயல்வாருள் எல்லாம் கலை-புலன்களை விட முயல்வார் எல்லாருள்ளும் மிக்கவன்.
விளக்கம்:
(முற்றத் துறந்தவர் விட்டமையின், 'முயல்வார்' என்றது மூன்றாம் நிலையில் நின்றாரை. அந்நிலைதான் பலவகைப்படுதலின், எல்லாருள்ளும் எனவும், முயலாது வைத்துப் பயன் எய்தலின், 'தலை' எனவும் கூறினார்.)


Manakkudavar

(இதன் பொருள்) நெறியினானே யில் வாழ்க்கை வாழ்பவனென்பான், முயல்வா ரெல்லாரினுந் தலையாவான், (எ - று ) முயறல் - பொருட்கு முயறல்.