குறள் 46

இல்வாழ்க்கை

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ தெவன்

araththaatrrin ilvaalkkai aatrrin puraththaatrril
pooip paeruva thaevan


Shuddhananda Bharati

Married Life

Who turns from righteous family
To be a monk, what profits he?


GU Pope

Domestic Life

If man in active household life a virtuous soul retain,
What fruit from other modes of virtue can he gain?

What will he who lives virtuously in the domestic state gain by going into the other, (ascetic) state ?


Mu. Varadarajan

ஒருவன்‌ அறநெறியில்‌ இல்வாழ்க்கையைச்‌ செலுத்தி வாழ்வானானால்‌, அத்தகையவன்‌ வேறு நெறியில்‌ சென்று பெறத்தக்கது என்ன?


Parimelalagar

இல்வாழ்க்கை அறத்தாற்றின் ஆற்றின்-ஒருவன் இல்வாழ்க்கையை அறத்தின் வழியே செலுத்துவன் ஆயின்; புறத்தாற்றின் போஒய்ப் பெறுவது எவன்-அவன் அதற்குப் புறம் ஆகிய நெறியில் போய்ப் பெறும் பயன் யாது?
விளக்கம்:
(அறத்தாறு' என்பது பழி அஞ்சிப் பகுத்து உண்டலும், அன்பு உடைமையும் என மேற்சொல்லிய ஆறு. 'புறத்தாறு' இல்லை விட்டு வனத்துச் செல்லும் நிலை. அந்நிலையின் இது பயனுடைத்து என்பார், 'போஒய்ப் பெறுவது எவன்' என்றார்.)


Manakkudavar

(இதன் பொருள்) இல்வாழ்க்கையாகிய நிலையை அறநெறியிலே செலுத்தவல்லவ னாயின், புறநெறியாகிய தவத்திற் போய்ப் பெறுவது யாதோ?
(என்றவாறு). மேல் சீலனாய்க் கொடுக்கவேண்டுமென்றார் அவ்வாறு செய்யின் தவப்பய னும் இது தானே தருமென்றார்.