குறள் 45

இல்வாழ்க்கை

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது

anpum aranum utaiththaayin ilvaalkkai
panpum payanum athu


Shuddhananda Bharati

Married Life

In grace and gain the home excels,
Where love with virtue sweetly dwells.


GU Pope

Domestic Life

If love and virtue in the household reign,
This is of life the perfect grace and gain.

If the married life possess love and virtue, these will be both its duty and reward.


Mu. Varadarajan

இல்வாழ்க்கை அன்பும்‌ அறமும்‌ உடையதாக விளங்குமானால்‌, அந்த வாழ்க்கையின்‌ பண்பும்‌ பயனும்‌ அதுவே ஆகும்‌.


Parimelalagar

இல்வாழ்க்கை அன்பும் அறனும் உடைத்தாயின்-ஒருவன் இல் வாழ்க்கை தன் துணைவிமேல் செய்யத்தகும் அன்பினையும், பிறர்க்குப் பகுத்து உண்டல் ஆகிய அறத்தினையும் உடைத்தாயின்; அது பண்பும் பயனும்-அவ்வுடைமை அதற்குப் பண்பும் பயனும் ஆகும்.
விளக்கம்:
(நிரல்நிரை.இல்லாட்கும் கணவற்கும் நெஞ்சு ஒன்றாகா வழி இல்லறம் கடைபோகாமையின், அன்புடைமை பண்பு ஆயிற்று; அறனுடைமை பயன் ஆயிற்று. இவை மூன்று பாட்டானும் இல்நிலையில் நின்றான் அறஞ்செய்யுமாறு கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) இல்வாழ்க்கையாகிய சிலை யாவர்மாட்டும் அன்பு செய்தலையும் அறஞ்செய்தலையும் உடைத்தாயின், அதற்குக் குணமாவதும் பயனாவதும் அவ் > ரண்டினையு முடைமை தானே,
(என்றவாறு). பயன் வேறு வேண்டாம்; தனக்கும் பிறர்க்கும் உண்டான முகாலர்ச்சி தானே யமையுமென்பது. இது பழியொடு வாராத வுணவை நுகர வேற்பார் மாட்டு அன்பு செய்ய வேண்டுமென்பதும் சீலனாய்க் கொடுக்கவேண்டுமெ தும் கூறிற்று.