Kural 44
குறள் 44
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்
paliyachip paaththoon utaiththaayin vaalkkai
valiyaenjchal yenjgnyaanrum il
Shuddhananda Bharati
Sin he shuns and food he shares
His home is bright and brighter fares.
GU Pope
Who shares his meal with other, while all guilt he shuns,
His virtuous line unbroken though the ages runs.
His descendants shall never fail who, living in the domestic state, fears vice (in the acquisition of property) and shares his food (with others).
Mu. Varadarajan
பொருள் சேர்க்கும்போது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, செலவு செய்யும்போது பகுத்து உண்பதை மேற்கொண்டால், அவ்வாழ்க்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.
Parimelalagar
பழி அஞ்சிப் பாத்து ஊண் வாழ்க்கை உடைத்தாயின்-பொருள் செய்யுங்கால் பாவத்தை அஞ்சி ஈட்டி, அப்பொருளை இயல்பு உடைய மூவர் முதலாயினார்க்கும் தென்புலத்தார் முதலிய நால்வர்க்கும் பகுத்துத் தான் உண்டலை ஒருவன் இல்வாழ்க்கை உடைத்தாயின்; வழி எஞ்ஞான்றும் எஞ்சல் இல்-அவன் வழி உலகத்து எஞ்ஞான்றும் நிற்றல் அல்லது இறத்தல் இல்லை.
விளக்கம்:
(பாவத்தான் வந்த பிறன் பொருளைப் பகுத்து உண்ணின், அறம் பொருளுடையார் மேலும், பாவம் தன் மேலுமாய் நின்று வழி எஞ்சும் ஆகலின், 'பழி அஞ்சி' என்றார். வாழ்வானது உடைமை வாழ்க்கை மேல் ஏற்பட்டது.)
Manakkudavar
(இதன் பொருள்) இல்வாழ்க்கையாகியநிலை பழியையுமஞ்சிப் பகுத்துண்டலையு முடைத்தாயின், தன் தொழுங்கு இடையறுதல எக் காலத்தினுமில்லை,
(என்றவாறு). மேல் பகுக்குமாறு கூறினார், பகுக்குங்காற் பழியொடு வாராத பொருளைப் பகுக்க வேண்டுமென்று கூறினார்.