குறள் 508

தெரிந்துதெளிதல்

தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்

thaeraan piranaith thaelindhthaan valimurai
theeraa idumpai tharum


Shuddhananda Bharati

Testing of men for confidence

To trust an untried stranger brings
Endless troubles on all our kins.


GU Pope

Selection and Confidence

Who trusts an untried stranger, brings disgrace,
Remediless, on all his race.

Sorrow that will not leave even his posterity will come upon him chooses a stranger whose characterhe has not known.


Mu. Varadarajan

மற்றவனைப்‌ பற்றி ஒன்றும்‌ ஆராயாமல்‌ தெளிந்தால்‌ அஃது (அவனுக்கு மட்டும்‌ அல்லாமல்‌) அவனுடைய வழிமுறையில்‌ தோன்றியவர்க்கும்‌ தீராத துன்பத்தைக்‌ கொடுக்கும்‌.


Parimelalagar

பிறனைத் தேரான் தெளிந்தான் - தன்னோடு இயைபுடையன் அல்லாதானைப் பிறப்பு முதலியவற்றானும் செயலானும் ஆராய்ந்து தெளிந்த அரசனுக்கு; வழிமுறை தீரா இடும்பை தரும் - அத்தெளிவு தன் வழிமுறையினும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.
விளக்கம்:
[இயைபு: தன் குடியோடு தொடர்ந்த மரபு. இதனானே அதுவும் வேண்டும் என்பது பெற்றாம். தெளிதல் அவன் கண்ணே வினையை வைத்தல். அவ்வினை கெடுதலால், தன் குலத்துப் பிறந்தாரும் பகைவர் கைப்பட்டுக் கீழாய்விடுவர் என்பதாம். நான்கன் உருபு விகாரத்தால் தொக்கது.]


Manakkudavar

(இதன் பொருள்) பிறனை ஆராயாதே வழிமுறையென்று தெளிந்தவனுக்கு அத் தெளிவு, தீர்தலில்லாத துன்பமுண்டாக்கும், (எ - று ). இது தன் குலத்திலுள் ளாருள் அமாத்தியராயினார் வழியில் உள்ளாரைத் தேறலா மென்றது.