குறள் 507

தெரிந்துதெளிதல்

காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும்

kaathanmai kandhthaa arivariyaarth thaeruthal
paethaimai yellaandh tharum


Shuddhananda Bharati

Testing of men for confidence

On favour leaning fools you choose;
Folly in all its forms ensues.


GU Pope

Selection and Confidence

By fond affection led who trusts in men of unwise soul,
Yields all his being up to folly's blind control.

To choose ignorant men, through partiality, is the height of folly.


Mu. Varadarajan

அறியவேண்டியவற்றை அறியாதிருப்பவரை அன்புடைமை காரணமாக நம்பித்‌ தெளிதல்‌, (தெளிந்தவர்க்கு) எல்லா அறியாமையையும்‌ கொடுக்கும்‌.


Parimelalagar

காதன்மை கந்தா அறிவு அறியார்த் தேறுதல் - அன்பு உடைமை பற்றுக்கோடாகத் தமக்கு அறியவேண்டுவன அறியாதாரைத் தெளிதல்; பேதைமை எல்லாம் தரும் - அரசனுக்கு எல்லா அறியாமையும் கொடுக்கும்.
விளக்கம்:
[தன்னோடு அவரிடை நின்ற அன்புபற்றி, அரசன் அறிவிலார் மேல் வினையை வைப்பின், அஃது அவர் அறிவின்மையாற் கெடும்; கெட்டால் அவர்க்கு உளதேயன்றி வினைக்கு உரியாரை அறியாமை, மேல் விளைவு அறியாமை முதலாக அவனுக்கு அறியாமை பலவும் உளவாம் என்பதாம்.]


Manakkudavar

(இதன் பொருள்) அன்புடைமையே பற்றாக, அறிவுடையாரல்லாதாரைத் தேறுதல், எல்லா அறியாமையும் தரும்,
(என்றவாறு). அரசர் அன்புடையாரைத் தேறலாடென்பது பராசரர் மதம். இஃது இவ் வளவினால் தேறலாகாதென்றது.