Kural 506
குறள் 506
அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி
atrraaraith thaeruthal oampuka matrravar
patrrilar naanaar pali
Shuddhananda Bharati
Choose not those men without kinsmen
Without affine or shame of sin.
GU Pope
Beware of trusting men who have no kith of kin;
No bonds restrain such men, no shame deters from sin.
Let (a king) avoid choosing men who have no relations; such men have no attachment, andthereforehave no fear of crime.
Mu. Varadarajan
சுற்றத்தாரின் தொடர்பு அற்றவரை நம்பித் தெளியக் கூடாது; அவர் உலகத்தில் பற்று இல்லாதவராகையால் பழிக்கு நாணமாட்டார்.
Parimelalagar
அற்றாரைத் தேறுதல் ஓம்புக - சுற்றம் இல்லாரைத் தெளிதலை ஒழிக; அவர் மற்றுப் பற்று இலர் - அவர் உலகத்தோடு தொடர்பு இலர்; பழி நாணார் - ஆகலான் பழிக்கு அஞ்சார்.
விளக்கம்:
['பற்று இலர்' என்பதனால் 'சுற்றம் என்பது வருவிக்கப்பட்டது. உலகத்தார் பழிப்பன ஒழிதற்கும் புகழ்வன செய்தற்கும் ஏதுவாகிய உலகநடை இயல்பு சுற்றம் இல்லாதார்க்கு இன்மையின், அவர் தெளியப்படார் என்பதாம்.]
Manakkudavar
(இதன் பொருள்) ஒழுக்கமற்றாரைத் தேறுதலைத் தவிர்க; அவர் ஓரிடத்துப் பற் றுடையரும் அல்லர்; பழிக்கும் நாணாராதலான், (எ - று ).