Kural 505
குறள் 505
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்
paerumaikkum yaenaichiirumaikkum thaththam karumamae
karumamae katdalaik kal
Shuddhananda Bharati
By the touchstone of deeds is seen
If any one is great or mean.
GU Pope
Of greatness and of meanness too,
The deeds of each are touchstone true.
A man's deeds are the touchstone of his greatness and littleness.
Mu. Varadarajan
(மக்களுடைய குணங்களாலாகிய பெருமைக்கும் (குற்றங்களாலாகிய) சிறுமைக்கும் தேர்ந்தறியும் உரை கல்லாக இருப்பவை அவரவருடைய செயல்களே ஆகும்.
Parimelalagar
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் கட்டளைக்கல் - பிறப்பு குணம் அறிவு என்பனவற்றான் மக்கள் எய்தும் பெருமைக்கும் மற்றைச் சிறுமைக்கும் உரைகல்லாவது; தத்தம் கருமமே - தாம் தாம் செய்யும் கருமமே, பிறிதில்லை.
விளக்கம்:
(இஃது ஏகதேச உருவகம், மக்களது பெருமையும் சிறுமையும் தப்பாமல் அறியலுறுவார்க்குப் பிற கருவிகளும் உளவாயினும், முடிந்த கருவி செயல் என்பது தேற்றேகாரத்தால் பெற்றாம். இதனால் குணம் குற்றங்கள் நாடற்குக கருவி கூறப்பட்டது.]
Manakkudavar
(இதன் பொருள்) ஒருவனைப் பெரியனாக்குதற்கும் மற்றைச் சிறியனாக்குதற்கும் வேறு தேறவேண்டா; அவரவர் செய்யவல்ல கருமந்தானே அதற்குத்தக ஆக் கும் படிக்கல்லாம்,
(என்றவாறு). இஃது ஒருவனை ஒரு காரியத்திலே முற்படவிட்டு, அவன் செய்யவல்ல அளவுங் கண்டு, பின்னைப் பெரியனாக்க அமையுமென்றது, இது குற்றங்கூறாமை பலவற்றிற்கு முள்ள வேறுபாடென்று கொள்ளப்படும்.