குறள் 504

தெரிந்துதெளிதல்

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்

kunamnaatik kutrramum naati avatrrul
mikainaati mikka kolal


Shuddhananda Bharati

Testing of men for confidence

Good and evil in man weigh well
Judge him by virtues which prevail.


GU Pope

Selection and Confidence

Weigh well the good of each, his failings closely scan,
As these or those prevail, so estimate the man.

Let (a king) consider (a man's) good qualities, as well as his faults, and then judge (of his character)by that which prevails.


Mu. Varadarajan

ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும்‌ ஆராய்ந்து, மிகுதியானவை எவையென ஆராய்ந்து, மிகுந்திருப்பவற்றால்‌ தெளிந்து கொள்ள வேண்டும்‌.


Parimelalagar

குணம் நாடி - குணம் குற்றங்களுள் ஒன்றேயுடையார் உலகத்து இன்மையின், ஒருவன் குணங்களை ஆராய்ந்து; குற்றமும் நாடி - ஏனைக் குற்றங்களையும் ஆராய்ந்து; அவற்றுள் மிகை நாடி - பின் அவ்விரு பகுதியுள்ளும் மிக்கவற்றை ஆராய்ந்து; மிக்க கொளல் - அவனை அம்மிக்கவற்றானே அறிக.
விளக்கம்:
[மிகையுடையவற்றை 'மிகை' என்றார். அவை யாவன: தலைமையானாகப் பன்மையானாக உயர்ந்தன. அவற்றான் அறிதலாவது, குணம் மிக்கதாயின் வினைக்கு உரியன் என்றும், குற்றம் மிக்கதாயின் அல்லன் என்றும் அறிதல். குணமே யுடையார் உலகத்து அரியர் ஆகலின், இவ்வகை யாவரையும் தெளிக என்பது இதனான் கூறப்பட்டது.]


Manakkudavar

(இதன் பொருள்) ஒருவனுக்குள்ள குணத்தையும் ஆராய்ந்து குற்றத்தையும் ஆராய்ந்து அவற்றுள் மிக்க தனை யறிந்து, அவற்றுள்ளும் தலைமையாயினும் பன்மையாயினும் மிக்கதனைக் கொள்க. (எ - று.)