குறள் 501

தெரிந்துதெளிதல்

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்

aramporul inpam uyirachcham naankin
thirandhthaerindhthu thaerap padum


Shuddhananda Bharati

Testing of men for confidence

Pleasure, gold, fear of life Virtue-
Test by these four and trust the true.


GU Pope

Selection and Confidence

How treats he virtue, wealth and pleasure? How, when life's at stake,
Comports himself? This four-fold test of man will full assurance make.

Let (a minister) be chosen, after he has been tried by means of these four things, viz, -his virtue, (loveof) money, (love of) sexual pleasure, and tear of (losing) life.


Mu. Varadarajan

அறம்‌, பொருள்‌, இன்பம்‌, உயிர்க்காக அஞ்சும்‌ அச்சம்‌ ஆகிய நான்கு வகையாலும்‌ ஆராயப்பட்ட பிறகே ஒருவன்‌ (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்‌) தெளியப்படுவான்‌.


Parimelalagar

அறம் பொருள் இன்பம் உயிர் அச்சம் - அரசனால் தெளியப்படுவான் ஒருவன், அறமும் பொருளும் இன்பமும் உயிர்ப் பொருட்டான் வரும் அச்சமும் என்னும்; நான்கின் திறம் தெரிந்து தேறப்படும் - உபதை நான்கின் திறத்தான் மனவியல்பு ஆராய்ந்தால் பின்பு தெளியப்படும்.
விளக்கம்:
[அவற்றுள், அற உபதையாவது, புரோகிதரையும் அறவோரையும் விட்டு அவரால் 'இவ்வரசன் அறவோன் அன்மையின் இவனைப் போக்கி அறனும் உரிமையும் உடையான் ஒருவனை வைத்தற்கு எண்ணினம்; இதுதான் யாவர்க்கும் இயைந்தது; நின் கருத்து என்னை?' எனச் சூளுறவோடு சொல்லுவித்தல். பொருள் உபதையாவது, சேனைத் தலைவனையும் அவனோடு இயைந்தாரையும் விட்டு, அவரான் 'இவ்வரசன் இவறன் மாலையன் ஆகலின், இவனைப் போக்கிக் கொடையும் உரிமையும் உடையான் ஒருவனை வைத்தற்கு எண்ணினம்; இதுதான் யாவருக்கும் இயைந்தது; நின் கருத்து என்னை?' எனச் சூளுறவோடு சொல்லுவித்தல். இன்ப உபதையாவது, தொன்று தொட்டு உரிமையோடு பயின்றாளொரு தவமுதுமகளை விட்டு, 'அவளால், உரிமையுள் இன்னாள் நின்னைக் கண்டு வருத்தமுற்றுக் கூட்டுவிக்க வேண்டும் என்று என்னை விடுத்தாள்; அவளைக் கூடுவையாயின் நினக்குப் பேரின்பமே அன்றிப் பெரும்பொருளும் கைகூடும்' எனச் சூளுறவோடு சொல்லுவித்தல். அச்ச உபதையாவது, ஒரு நிமித்தத்தின் மேலிட்டு ஓர் அமைச்சனால் ஏனையோரை அவன் இல்லின் கண் அழைப்பித்து, 'இவர் அறைபோவான் எண்ணற்குக் குழீயினார்' என்று தான் காவல் செய்து, 'ஒருவனால் இவ்வரசன் நம்மைக் கொல்வான் சூழ்கின்றமையின் அதனை நாம் முற்படச் செய்து, நமக்கு இனிய அரசன் ஒருவனை வைத்தல் ஈண்டை யாவர்க்கும் இணைந்தது; நின் கருத்து என்னை?' எனச் சூளுறவோடு சொல்லுவித்தல். இந்நான்கினும் திரிபிலன் ஆயவழி, எதிர்காலத்தும் திரிபிலன் எனக் கருத்தளவையால் தெளியப்படும் என்பதாம். இவ்வடநூற் பொருண்மையை உட்கொண்டு இவர் ஓதியது அறியாது, பிறரெல்லாம் இதனை 'உயிரெச்சம்' எனப் பாடம் திரித்துத் தத்தமக்குத் தோன்றியவாறே உரைத்தார்.]


Manakkudavar

தெரிந்து தெளிதலாவது ஆராய்ந்து தெளிதல். காரியந் தப்பாமலெண்ணி, அதற்காங்காலமும் இடமும் அறிந்தாலும், அது செய்து முடிக்கும் அமாத்தியரை யும் எண்ணிக் கொள்ள வேண்டுதலின், அதன்பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்) அறமும் பொருளும் இன்பமும் உயிரச்சமுமென்னும் நான்கின் கூறுபாட்டினையும் ஆராய்ந்து, ஆராய்ந்த பின்பு ஒருவன் அரசனால் தெளியப் படுவான்,
(என்றவாறு). முன்பு நான்கு பொருளையும் ஆராய வேண்டுமென்றார் பின்பு தேறப்படு மென்றார்.