Kural 502
குறள் 502
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் சுட்டே தெளிவு
kutippirandhthu kutrraththin neengki vaduppariyum
naanutaiyaan suttae thaelivu
Shuddhananda Bharati
Spotless name of noble birth
Shamed of stain-that choice is worth.
GU Pope
Of noble race, of faultless worth, of generous pride
That shrinks from shame or stain; in him may king confide.
(The king's) choice should (fall) on him, who is of good family, who is free from faults, and who hasthe modesty which fears the wounds (of sin).
Mu. Varadarajan
நல்ல குடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழியான செயல்களைச் செய்ய அஞ்சுகின்ற நாணம் உடையவனையே நம்பித் தெளிய வேண்டும்.
Parimelalagar
குடிப்பிறந்து - உயர்ந்த குடியில் பிறந்து; குற்றத்தின் நீங்கி - குற்றங்களினின்று நீங்கி; வடுப்பரியும் நாண் உடையான் கட்டே தெளிவு - தமக்கு வடு வருங்கொல் என்று அஞ்சா நிற்கும் நாணுடையவன் கண்ணதே அரசனது தெளிவு.
விளக்கம்:
[குற்றங்களாவன; மேல் அரசனுக்குச் சொல்லிய பகை ஆறும்; மடி, மறப்பு, பிழைப்பு என்ற இவை முதலாயவும் ஆம். நாண்; இழிதொழில்களில் மனம் செல்லாமை. இவை பெரும்பான்மையும் தக்கோர்வாய்க் கேட்டலாகிய ஆகம அளவையால் தெரிவன. இந்நான்கும் உடையவனையே தெளிக என்பதாம்.]
Manakkudavar
(இதன் பொருள்) உயர்குடியிற் பிறந்து, காமம் வெகுளி முதலான குற்றத்தில் னின்று நீங்கி, தனக்கு வரும் பழியை அறுக்க வல்ல நாணமுடையவன்கண் ணதே அரசனது தெளிவு,
(என்றவாறு). இதுவும் உடன்பாடென்று கொள்ளப்படுமென்றவாறு.