Kural 5
குறள் 5
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
irulsaer iruvinaiyum saeraa iraivan
porulsaer pukalpurindhthaar maatdu
Shuddhananda Bharati
God's praise who tell, are free from right
And wrong, the twins of dreaming night.
GU Pope
The men, who on the 'King's' true praised delight to dwell,
Affects not them the fruit of deeds done ,ill or well.
The two-fold deeds that spring from darkness shall not adhere to those who delight in the true praise of God.
Mu. Varadarajan
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம், அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.
Parimelalagar
இருள் சேர் இருவினையும் சேரா - மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு - இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து.
விளக்கம்:
(இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை 'இருள்' என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் 'இருவினையும் சேரா' என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக் கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே 'பொருள் சேர் புகழ்' எனப்பட்டது. புரிதல்-எப்பொழுதும் சொல்லுதல்.) --
Manakkudavar
(இதன் பொருள்) அறமாகிய கடலையுடைய அந்தணனது திருவடியைச் சேர்ந்த வர்க்கல்லது ஒழிந்தபேர்களுக்குப் பிறவாழியை நீந்தலாகாது; அது பெறுத லரிது,
(என்றவாறு) இது காமமும் பொருளும் பற்றி வரும் அவலங் கெடு மென்றது.