குறள் 4

கடவுள் வாழ்த்து

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல

vaenduthal vaentaamai ilaanati saerndhthaarkku
yaandum idumpai ila


Shuddhananda Bharati

The praise of God

Who hold His feet who likes nor loathes
Are free from woes of human births.


GU Pope

The Praise of God

His foot, 'Whom want affects not, irks not grief,' who gain
Shall not, through every time, of any woes complain.

To those who meditate the feet of Him who is void of desire or aversion, evil shall never come.


Mu. Varadarajan

விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின்‌ திருவடிகளைப்‌ பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும்‌ எவ்விடத்திலும்‌ துன்பம்‌ இல்லை.


Parimelalagar

வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு - ஒரு பொருளையும் விழைதலும் வெறுத்தலும் இல்லாதவன் அடியைச் சேர்ந்தார்க்கு; யாண்டும் இடும்பை இல - எக்காலத்தும் பிறவித் துன்பங்கள் உளவாகா.
விளக்கம்:
(பிறவித் துன்பங்களாவன: தன்னைப் பற்றி வருவனவும், பிற உயிர்களைப் பற்றி வருவனவும், தெய்வத்தைப் பற்றி வருவனவும் என மூவகையான் வரும் துன்பங்கள். அடி சேர்ந்தார்க்கும் அவ்விரண்டும் (வேண்டுதலும் வேண்டாமையும்) இன்மையின், அவை காரணமாக வரும் மூவகைத் துன்பங்களும் இலவாயின.)


Manakkudavar

(இதன் பொருள்) தனக்கு நிகரில்லாதானது திருவடியைச் சேர்ந்தவர்க் கல்லது மனத்துண்டாங் கவலையை மாற்றுத லரிது,
(என்றவாறு) வீடு பெறலாவது அவலக்கவலைக் கையாற்றினீங்கிப் புண்ணிய பாவமென்னு மிரண்டினையுஞ் சாராமற் சாதலும் பிறத்தலுமில்லாததொரு தன்மையை யெய்து தல். அது பெறுமென்பார் முற்படக் கவலை கெடுமென்றார்; அதனால், எல்லாத் துன்பமும் வருமாதலின்.