குறள் 499

இடனறிதல்

சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது

sirainalanum seerum ilaraeninum maandhthar
urainilaththodu otdal arithu


Shuddhananda Bharati

Judging the place

To face a foe at home is vain
Though fort and status are not fine.


GU Pope

Knowing the Place

Though fort be none, and store of wealth they lack,
'Tis hard a people's homesteads to attack!

It is a hazardous thing to attack men in their own country, although they may neither have powernor a good fortress.


Mu. Varadarajan

அரணாகிய நன்மையும்‌ மற்றச்‌ சிறப்பும்‌ இல்லாதவராயினும்‌ பகைவர்‌ வாழ்கின்ற இடத்திற்குச்‌ சென்று அவரைத்‌ தாக்குதல்‌ அரிது.


Parimelalagar

சிறை நலனும் சீரும் இலர் எனினும் - அரண் அழித்தற்கு அருமையும் பெருமையுமாகிய ஆற்றல் உடையர் அல்லராயினும்; மாந்தர் உறை நிலத்தொடு ஒட்டல் அரிது - வினைக்கு உரிய மாந்தரை அவர் உறைகின்ற நிலத்தின்கண் சென்று தாக்குதல் அரிது.
விளக்கம்:
['நிலத்தொடு' என்பது வேற்றுமை மயக்கம். ஆண்மை உடையாரைச் சிறுமைநோக்கி இருப்பின்கண் சென்று தாக்கின், அவர் அது விட்டுப் போதல் துணிவினரன்றிச் சாதல் துணிவினராவர்; ஆகவே, அவர்க்குப் பெரும்படை உடையும் என்பதாம்.]


Manakkudavar

(இதன் பொருள்) அரசன் பதியும் பெருமையும் இலராயினும், மாந்தர் உறைநிலத்தின் கண் பொருந்துத லரிது,
(என்றவாறு). இது மாந்தர் உறைவிடத்தின்கண் செல்லுங்கால், அறிந்து செல்லவேண்டும் மென்றது.