குறள் 498

இடனறிதல்

சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்

sirupataiyaan sellidam saerin urupataiyaan
ookkam alindhthu vidum


Shuddhananda Bharati

Judging the place

Though force is small, if place is right
One quells a foe of well-armed might.


GU Pope

Knowing the Place

If lord of army vast the safe retreat assail
Of him whose host is small, his mightiest efforts fail.

The power of one who has a large army will perish, if he goes into ground where only a small armycan act.


Mu. Varadarajan

சிறிய படை உடையவனுக்குத்‌ தக்கதாக உள்ள இடத்தில்‌ பொருந்தி நின்றால்‌, பெரிய படை உடையவன்‌ தன்‌ ஊக்கம்‌ அழிவான்‌.


Parimelalagar

உறுபடையான் - பெரும்படையுடைய அரசன்; சிறுபடையான் செல் இடம் சேரின் - ஏனைச் சிறுபடையானை அழித்தல் கருதி அவன் புகலைச் சென்று சாருமாயின்; ஊக்கம் அழிந்து விடும் - அவனால் தன் பெருமை அழியும்.
விளக்கம்:
['செல் இடம்' அவனுக்குச் செல்லும் இடம். 'அழிந்து விடும்' என்பது 'எழுந்திருக்கும்' என்றாற்போல் ஒரு சொல். ஊக்கத்தின் அழிவு உடையான்மேல் ஏற்றப்பட்டது. தன் படைப் பெருமை நோக்கி, இடன் நோக்காது செல்வன் ஆயின், அஃது அப்படைக்கு ஒருங்குசென்று வினைசெயல் ஆகாமையானாகப் பயிற்சியின்மையானாக, அப்பெருமையால் பயன் இன்றித் தான் அழிந்துவிடும் என்பதாம்.]


Manakkudavar

(இதன் பொருள்) சிறு படையை யுடையவனுக்கு இயலுமிடத்தே பெரும் படையை யுடையவன் பொருந்துவனாயின், மன மிகுதி கெடும்,
(என்றவாறு). இஃது இகழ்ந்து செல்லின், வெற்றியில்லையாமென்றது.