Kural 496
குறள் 496
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து
kadalotaa kaalval naedundhthaer kadalodum
naavaayum oataa nilaththu
Shuddhananda Bharati
Sea-going ship goes not on shore
Nor on sea the strong-wheeled car.
GU Pope
The lofty car, with mighty wheel, sails not o'er watery main,
The boat that skims the sea, runs not on earth's hard plain.
Wide chariots, with mighty wheels, will not run on the ocean; neither will ships that the traverseocean, move on the earth.
Mu. Varadarajan
வலிய சக்கரங்களையுடைய பெரிய தேர்கள் கடலில் ஓடமுடியாது; கடலில் ஓடுகின்ற கப்பல்களும் நிலத்தில் ஓடமுடியாது.
Parimelalagar
கால் வல் நெடுந்தேர் கடல் ஓடா - நிலத்தின்கண் ஓடும் கால்வலிய நெடிய தேர்கள் கடலின்கண் ஓடமாட்டா; கடல் ஓடும் நாவாயும் நிலத்து ஓடா - இனி அக்கடலின் கண் ஓடும் நாவாய்கள் தாமும் நிலத்தின் கண் ஓடமாட்டா.
விளக்கம்:
['கடல் ஓடா' என்ற மறுதலை அடையான் 'நிலத்து ஓடும்' என்பது வருவிக்கப்பட்டது. 'கால்வல் நெடுந்தேர்' என்பது ஓடுதற்கு ஏற்ற காலும் பெருமையும் உடையவாயினும் என்பதுபட நின்றது. 'மேற் சென்றார் பகைவர் இடங்களை அறிந்து, அவற்றிற்கு ஏற்ற கருவிகளான் வினை செய்க,' என்பது தோன்ற நின்றமையின், இதுவும் மேலை அலங்காரம் ஆயிற்று.]
Manakkudavar
(இதன் பொருள்) கால் வலிய நெடுந்தேர் கடலின்கண் ஓடாது; கடலின்கண் ஒடும் நாவாயும் நிலத்தின்கண் ஓடாது,
(என்றவாறு) இஃது இடத்திற்கான கருவி பண்ண வேண்டுமென்றது.