குறள் 493

இடனறிதல்

ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்

aatrraarum aatrri adupa idanarindhthu
potrraarkan potrrich seyin


Shuddhananda Bharati

Judging the place

Weaklings too withstand foe's offence
In proper fields of strong defence.


GU Pope

Knowing the Place

E'en weak ones mightily prevail, if place of strong defence,
They find, protect themselves, and work their foes offence.

Even the powerless will become powerful and conquer, if they select a proper field (of action), andguard themselves, while they make war on their enemies.


Mu. Varadarajan

தக்க இடத்தை அறிந்து தம்மைக்‌ காத்துக்கொண்டு பகைவரிடத்திற்‌ சென்று தம்‌ செயலைச்‌ செய்தால்‌, வலிமை இல்லாதவரும்‌ வலிமை உடையவராய்‌ வெல்வர்‌.


Parimelalagar

இற்றாரும் ஆற்றி அடுப -வலியர் அல்லாதாரும் வலியாராய் வெல்வர்; இடம் அறிந்து போற்றிப் போற்றார்கண் செயின் - அதற்கு ஏற்ற இடத்தினை அறிந்து, தம்மைக் காத்துப் பகைவர்மாட்டு வினை செய்வாராயின்.
விளக்கம்:
['வினை' என்பதூஉம் 'தம்மை' என்பதூஉம் அவாய் நிலையான் வந்தன. காத்தல், பகைவரான் நலிவு வராமல் அரணானும் படையானும் காத்தல், இவற்றான் வினை செய்வாராயின் மேற்சொல்லிய வலியின்றியும் வெல்வர் என்பதாம்.]


Manakkudavar

(இதன் பொருள்) வலியில்லாதாரும் வலியுடையராய் வெல்வர்; பகைவர் மாட்டு வினை செய்யும் இடமறிந்து தம்மைக் காத்து வினை செய்வாராயின்,
(என்றவாறு).