குறள் 492

இடனறிதல்

முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும்

muransaerndhtha moimpi navarkkum aransaerndhthaam
aakkam palavundh tharum


Shuddhananda Bharati

Judging the place

Many are gains of fortresses
Ev'n to kings of power and prowess.


GU Pope

Knowing the Place

Though skill in war combine with courage tried on battle-field,
The added gain of fort doth great advantage yield.

Even to those who are men of power and expedients, an attack in connection with a fortification willyield many advantages.


Mu. Varadarajan

மாறுபாடு பொருந்திய வலிமை உடையவர்க்கும்‌ அரணோடு பொருந்தி ஏற்படுகின்ற வெற்றியானது பலவகைப்‌ பயன்களையும்‌ கொடுக்கும்‌.


Parimelalagar

முரண் சேர்ந்த மொய்ம்பினவர்க்கும் - மாறுபாட்டோடு கூடிய வலியினை உடையார்க்கும்; அரண் சேர்ந்து ஆம் ஆக்கம் பலவும் தரும் - அரணைச் சேர்ந்து ஆகின்ற ஆக்கம் பல பயன்களையும் கொடுக்கும்.
விளக்கம்:
[மாறுபாடாவது: ஞாலம் பொது எனப் பொறா அரசர் மனத்தின் நிகழ்வதாகலானும், வலியுடைமை கூறிய அதனானும், இது பகைமேற் சென்ற அரசர் மேற்றாயிற்று. உம்மை - சிறப்பு உம்மை. அரண் சேராது ஆம் ஆக்கமும் உண்மையின், ஈண்டு ஆக்கம் விசேடிக்கப் பட்டது. 'ஆக்கம்' என்றது அதற்கு ஏதுவாய் முற்றினை. அது கொடுக்கும் பயன்களாவன: பகைவரால் தமக்கு நலிவின்மையும், தாம் நிலைபெற்று நின்று அவரை நலிதலும் முதலாயின.]


Manakkudavar

(இதன் பொருள்)பகை கொள்ளும் வலியுடையவர்க்கும் அரணைச் சேர்ந்தாகின்ற ஆக்கம், பலபயனையுந் தரும்,
(என்றவாறு). இது பகைவரிடம் அறிதலே யன்றித் தமக்கு அமைந்த இடமும் அறிய வேண்டுமென்றது.