குறள் 491

இடனறிதல்

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது

thodangkatrka yevvinaiyum yellatrka mutrrum
idangkanda pinal lathu


Shuddhananda Bharati

Judging the place

No action take, no foe despise
Until you have surveyed the place.


GU Pope

Knowing the Place

Begin no work of war, depise no foe,
Till place where you can wholly circumvent you know.

Let not (a king) despise (an enemy), nor undertake any thing (against him), until he has obtained (asuitable) place for besieging him.


Mu. Varadarajan

முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக்‌ கண்டபின்‌ அல்லாமல்‌ எச்‌ செயலையும்‌ தொடங்கக்‌ கூடாது; பகைவரை இகழவும்‌ கூடாது.


Parimelalagar

முற்றும் இடம் கண்ட பின் அல்லது - பகைவரை முற்றுதற்கு ஆவதோர் இடம் பெற்றபின் அல்லது; எவ்வினையும் தொடங்கற்க - அவர் மாட்டு யாதொரு வினையையும் தொடங்கா தொழிக; எள்ளற்க - அவரைச் சிறியர் என்று இகழா தொழிக.
விளக்கம்:
[முற்றுதல்: வளைத்தல். அதற்கு ஆம் இடமாவது: வாயில்களானும் நூழைகளானும் அவர் புகலோடு போக்கு ஒழியும் வகை அரணினைச் சூழ்ந்து, ஒன்றற்கு ஒன்று துணையாய்த் தம்முள் நலிவில்லாத பலபடை இருப்பிற்கும், மதிலும் அகழும் முதலிய அரண் செய்யப்பட்ட அரசிருப்பிற்கும் ஏற்ற, நிலக்கிடக்கையும் நீரும் உடையது. அது பெற்றால் இரண்டும் செய்க என்பதாம்.]


Manakkudavar

இடனறிதலாவது வினை செய்யும் இடமறிதல். காலமறிந்தாலும் இடனறிந்து வினை செய்ய வேண்டுதலின், அதன்பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்) முடியுமிடங் கண்டாலல்லது, யாதொரு வினையுந் தொடங்கா தொழிக; எளிதென்றிகழாதொழிக,
(என்றவாறு). இஃது இடமறிதல் வேண்டுமென்பது கூறிற்று.