குறள் 484

காலமறிதல்

ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்

gnyaalam karuthinung kaikoodung kaalam
karuthi idaththaatr seyin


Shuddhananda Bharati

Knowing proper time

Choose proper time and act and place
Even the world you win with ease.


GU Pope

Knowing the fitting Time

The pendant world's dominion may be won,
In fitting time and place by action done.

Though (a man) should meditate (the conquest of) the world, he may accomplish it if he acts in theright time, and at the right place.


Mu. Varadarajan

(செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால்‌, உலகமே வேண்டும்‌ எனக்‌ கருதினாலும்‌ கைகூடும்‌.


Parimelalagar

ஞாலம் கருதினும் கைகூடும் - ஒருவன் ஞாலம் முழுவதும் தானே ஆளக் கருதினானாயினும் அஃது அவன் கையகத்ததாம்; காலம் கருதி இடத்தான் செயின் - அதற்குச் செய்யும் வினையைக் காலம் அறிந்து இடத்தோடு பொருந்தச் செய்வானாயின்.
விளக்கம்:
['இடத்தான்' என்பதற்கு, மேல் 'கருவியான்' என்பதற்கு உரைத்தாங்கு உரைக்க; கைகூடாதனவும் கைகூடும் என்பதாம். இவை மூன்று பாட்டானும் காலம் அறிதற் பயன் கூறப்பட்டது.]


Manakkudavar

(இதன் பொருள்). உலகமெல்லாம் பெறுதற்கு நினைத்தானாயினும் பெறலாம்; காலத் தைக் குறித்து இடனறிந்து செய்வனாயின்,
(என்றவாறு). இஃது எல்லாப் பொருளையும் மெய்து மென்றது.