குறள் 483

காலமறிதல்

அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்

aruvinai yaenpa ulavo karuviyaan
kaalam arindhthu seyin


Shuddhananda Bharati

Knowing proper time

What is hard for him who acts
With proper means and time and tacts?


GU Pope

Knowing the fitting Time

Can any work be hard in very fact,
If men use fitting means in timely act?

Is there anything difficult for him to do, who acts, with (the right) instruments at the right time ?


Mu. Varadarajan

(செய்யும்‌ செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன்‌ ஏற்ற காலத்தையும்‌ அறிந்து செய்தால்‌, அரிய செயல்கள்‌ என்பவை உண்டோ?


Parimelalagar

அருவினை என்ப உளவோ-அரசரால் செய்தற்கு அரிய வினைகள் என்று சொல்லப்படுவன உளவோ; கருவியான் காலம் அறிது செயின் - அவற்றை முடித்தற்கு ஏற்ற கருவிகளுடனே செய்தற்கு ஆம் காலம் அறிந்து செய்வராயின்
விளக்கம்:
[கருவிகளாவன: மூவகை ஆற்றலும் நால்வகை உபாயங்களுமாம். 'அவை உளவாய் வழியும் காலம் வேண்டும்' என்பது அறிவித்தற்குக் 'கருவியான்' என்றார். எல்லா வினையும் எளிதில் முடியும் என்பதாம்.]


Manakkudavar

(இதன் பொருள்) அரிய வினைபென்று சொல்லப்படுவன உளவோ? முடிக்கலாங் கருவியோடே கூடக் காலத்தை யறிந்து செய்ய வல்லாராயின், (எ - ற)