Kural 482
குறள் 482
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு
paruvaththodu otda olukal thiruvinaith
theeraamai aarkkung kayiru
Shuddhananda Bharati
Well-ordered seasoned act is cord
That fortune binds in bon accord.
GU Pope
The bond binds fortune fast is ordered effort made,
Strictly observant still of favouring season's aid.
Acting at the right season, is a cord that will immoveably bind success (to a king).
Mu. Varadarajan
காலத்தோடு பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் (நில்லாத இயல்பு உடைய செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும் கயிறாகும்.
Parimelalagar
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் - அரசன் காலத்தோடு பொருந்த வினைசெய்து ஒழுகுதல்; திருவினைத் தீராமை ஆர்க்கும் கயிறு - ஒருவர்கண்ணும் நில்லாது நீங்கும் செல்வத்தைத் தன்கண் நீங்காமல் பிணிக்கும் கயிறாம்.
விளக்கம்:
[காலத்தோடு பொருந்துதல் - காலம் தப்பாமல் செய்தல். 'தீராமை' என்றதனால், தீர்தல் மாலையது என்பது பெற்றாம். வினை வாய்த்து வருதலான், அதனின் ஆகும் செல்வம் எஞ்ஞான்றும் நீங்காது என்பதாம்.]
Manakkudavar
(இதன் பொருள்) காலத்தோடு பொருந்த ஒழுகுதல், செல்வத்தை நீங்காமல் கட்டுவதொரு கயிறாம்,
(என்றவாறு). இனிக் காலமறிந்ததனால் வரும் பயன் கூறுவார் முற்படச் செல்வம் கெடா தென்றார்.