குறள் 458

சிற்றினஞ்சேராமை

மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து

mananalam nankutaiya raayinum saannorkku
inanalam yaemaap putaiththu


Shuddhananda Bharati

Avoiding mean company

Men of wisdom, though good in mind
In friends of worth a new strength find.


GU Pope

Avoiding mean Associations

To perfect men, though minds right good belong,
Yet good companionship is confirmation strong.

Although they may have great (natural) goodness of mind, yet good society will tend to strengthenit.


Mu. Varadarajan

மனத்தின்‌ நன்மையை உறுதியாக உடையவராயினும்‌ சான்றோர்க்கு இனத்தின்‌ நன்மை மேலும்‌ நல்ல காவலாக அமைவதாகும்‌.


Parimelalagar

மனநலம் நன்கு உடையராயினும் - மன நன்மையை முன்னை நல்வினையால் தாமே உடையராயினும்; சான்றோர்க்கு இனநலம் ஏமாப்பு உடைத்து - அமைந்தார்க்கு இனநன்மை அதற்கு வலியாதலையுடைத்து.
விளக்கம்:
('நன்கால்' என்னும் மூன்றன் உருபு விகாரத்தால் தொக்கது. அந் நல்வினை உள்வழியும் மனநலத்தை வளர்த்து வருதலின், அதற்கு ஏமாப்பு உடைத்தாயிற்று.)


Manakkudavar

(இதன் பொருள்) மன நன்மை மிக வுடையராயினும், இன நன்மையுடைமை சான் றோர்க்குக் காவலாதலையுடைத்து,
(என்றவாறு) இஃது இனநலம் அல்லாராயின் பிறரா லிகழப்படுவராதலான், இனநலம் இகழ்ச்சி வாராமற் காக்குமென்றது.