குறள் 451

சிற்றினஞ்சேராமை

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்

sitrrinam anjsum paerumai sirumaithaan
sutrramaach koolndhthu vidum


Shuddhananda Bharati

Avoiding mean company

The ignoble the noble fear
The mean hold them as kinsmen dear.


GU Pope

Avoiding mean Associations

The great of soul will mean association fear;
The mean of soul regard mean men as kinsmen dear.

(True) greatness fears the society of the base; it is only the low - minded who will regard them asfriends.


Mu. Varadarajan

பெரியோரின்‌ இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும்‌; சிறியோரின்‌ இயல்பு அதையே சுற்றமாக எண்ணித்‌ தழுவிக்‌ கொள்ளும்‌.


Parimelalagar

பெருமை சிற்றினம் அஞ்சும் - பெரியோர் இயல்பு சிறிய இனத்தை அஞ்சாநிற்கும்; சிறுமை தான் சுற்றமாச் சூழ்ந்துவிடும் - ஏனைச் சிறியோர் இயல்பு அது சேர்ந்த பொழுதே அதனைத் தனக்குச் சுற்றமாக எண்ணித் துணியும்.
விளக்கம்:
(தத்தம் அறிவு திரியுமாறும், அதனால் தமக்கு வரும் துன்பமும் நோக்கலின், அறிவுடையார் அஞ்சுவர் என்றும், அறிவு ஒற்றுமையான் பிறிது நோக்காமையின், அறிவிலாதார் தமக்குச் சுற்றமாகத் துணிவர் என்றும் கூறினார். பொருளின் தொழில்கள் பண்பின்மேல் நின்றன. இதனான் 'சிறிய இனம் பெரியோர்க்கு ஆகாது' என்பது கூறப்பட்டது.)


Manakkudavar

சிற்றினஞ் சேராமையாவது காமுகரையும் சூதாடிகளையும் பெண்டிர் முத லாயினோரையும் சேர்ந்தொழுகினால் வருங்குற்றமும் சேராமையால் வரும் நன் மையும் கூறுதல். பெரியார் துணையாயினாலும் சிறியாரினத்தாரோடு ஒழுகின் , அது தீமை பயக்கு மென்று அதன் பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்) சிற்றினத்தை யஞ்சுவர் பெரியர்; சிறியவர் அதனைச் சுற்றமாகக் கொண்டு விடுவர்,
(என்றவாறு). இது பெருமை வேண்டுவார் சிற்றினஞ் சேராரென்றது.