குறள் 450

பெரியாரைத் துணைக்கோடல்

பல்லார் பகைகொளவிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்

pallaar pakaikolavitr paththaduththa theemaiththae
nallaar thodarkai vidal


Shuddhananda Bharati

Gaining great men's help

To give up good friends is ten times worse
Than being hated by countless foes.


GU Pope

Seeking the Aid of Great Men

Than hate of many foes incurred, works greater woe
Ten-fold, of worthy men the friendship to forego.

It is tenfold more injurious to abandon the friendship of the good, than to incur the hatred of themany.


Mu. Varadarajan

நல்லவராகிய பெரியாரின்‌ தொடர்பைக்‌ கைவிடுதல்‌ பலருடைய பகையைத்‌ தேடிக்கொள்வதைவிடப்‌ பத்து மடங்கு தீமை உடையதாகும்‌.


Parimelalagar

பல்லார் பகை கொள்லின் பத்து அடுத்த தீமைத்து - தான் தனியனாய் வைத்துப் பலரோடும் பகை கொள்ளுதலின் பதிற்று மடங்கு தீமை உடைத்து; நல்லார் தொடர் கை விடல் - அரசன் பெரியாரோடு நட்பினைக் கொள்ளா தொழிதல். (பலர் பகை ஆயக்கால் "மோதி முள்ளொடு முட்பகை கண்டிடல், பேது செய்து பிளந்திடல்"
விளக்கம்:
(சீவக. விமலை. 32) என்பவையல்லது, ஒருங்கு வினையாக் குறித்துச் செய்தாலும் ஒருவாற்றான் உய்தல் கூடும்; நல்லார் தொடர்பை விட்டால் ஒருவாற்றானும் உய்தல் கூடாமையின்; இது செய்தல் அதனினும் தீது என்பதாம். இவை மூன்று பாட்டானும் அது செய்யாத வழிப்படும் குற்றம் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) பலரோடு பகை கொண்டால் எவ்வளவு துன்பமுறும் அதனி னும் பத்து மடங்கு துன்பமுறும் ; பெரியாரைத் துணையாகக் கொள்ளாதொழி யின்,
(என்றவாறு)