Kural 449
குறள் 449
முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை
muthalilaarka oothiya millai mathalaiyaanj
saarpilaark killai nilai
Shuddhananda Bharati
No capital, no gain in trade
No prop secure sans good comrade.
GU Pope
Who owns no principal, can have no gain of usury;
Who lacks support of friends, knows no stability.
There can be no gain to those who have no capital; and in like manner there can be no permanenceto those who are without the support of adherents.
Mu. Varadarajan
முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை; அது போல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை.
Parimelalagar
முதல் இலார்க்கு ஊதியம் இல்லை . முதற்பொருள் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லையாம்; மதலையாம் சார்பு இலார்க்கு நிலை இல்லை - அது போலத் தம்மைத் தாங்குவதாம் துணையில்லாத அரசர்க்கு அதனான் வரும் நிலையில்லை.
விளக்கம்:
(முதலைப் பெற்றே இலாபம் பெற வேண்டுமாறு போலத் தாங்குவாரைப் பெற்றே நிலை பெற வேண்டும் என்பதாம். நிலை: அரச பாரத்தோடு சலியாது நிற்றல்.)
Manakkudavar
(இதன் பொருள்) முதலில்லாதார்க்கு இலாபமில்லையானாற் போல, தாங்குதலாகிய சார்பு இல்லாதார்க்கு அரசு நிலைநிற்றல் இல்லை,
(என்றவாறு)