குறள் 448

பெரியாரைத் துணைக்கோடல்

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்

itippaarai illaatha yaemaraa mannan
keduppaa rilaanung kedum


Shuddhananda Bharati

Gaining great men's help

The careless king whom none reproves
Ruins himself sans harmful foes.


GU Pope

Seeking the Aid of Great Men

The king with none to censure him, bereft of safeguards all,
Though none his ruin work, shall surely ruined fall.

The king, who is without the guard of men who can rebuke him, will perish, even though there be noone to destroy him.


Mu. Varadarajan

கடிந்து அறிவுரை கூறும்‌ பெரியாரின்‌ துணை இல்லாத காவலற்ற அரசன்‌ தன்னைக்‌ கெடுக்கும்‌ பகைவர்‌ எவரும்‌ இல்லாவிட்டாலும்‌ கெடுவான்‌.


Parimelalagar

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் - கழறுதற்கு உரியாரைத் தனக்குத் துணையாகக் கொள்ளாமையின் காவலற்ற அரசன்; கெடுப்பார் இலானும் கெடும் - பகையாய்க் கெடுப்பார் இல்லையாயினும் தானே கெடும்.
விளக்கம்:
('இல்லாத, ஏமரா' என்பன பெயரெச்ச அடுக்கு. கொடுப்பார் உளராவார் என்பது தோன்ற, 'இலானும்' என்றார். தானே கெடுதலாவது: பாகனில்லாத யானைபோல நெறியல்லா நெறிச் சென்று கெடுதல்.)


Manakkudavar

(இதன் பொருள்) கழறுவாரை யில்லாத காவலில்லாத அரசன் தன்னைப் பகைவ ராய் வந்து கெடுப்பார் இல்லையாயினும், தான் வேண்டியவா றொழுகிக் கெடும். இஃது உயிர்க்குக் கேடு வருமென்றது.