குறள் 447

பெரியாரைத் துணைக்கோடல்

இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்

itikkundh thunaiyaarai yaalvarai yaarae
kedukkundh thakaimai yavar


Shuddhananda Bharati

Gaining great men's help

No foe can foil his powers
whose friends reprove him when he errs.


GU Pope

Seeking the Aid of Great Men

What power can work his fall, who faithful ministers
Employs, that thunder out reproaches when he errs.

Who are great enough to destroy him who has servants that have power to rebuke him ?


Mu. Varadarajan

கடிந்து அறிவுரை கூறவல்ல பெரியாரின்‌ துணை கொண்டு நடப்பவரைக்‌ கெடுக்கும்‌ ஆற்றல்‌ உடையவர்‌ யார்‌ இருக்கின்றனர்‌?


Parimelalagar

இடிக்கும் துணையாரை ஆள்வாரை - தீயன கண்டால் நெருங்கிச் சொல்லும் துணையாந் தன்மையை உடையாரை 'இவர் நமக்குச் சிறந்தார்' என்று ஆளும்அரசரை, கெடுக்கும் தகைமையவர் யார் - கெடுக்கும் பெருமை உடைய பகைவர் உலகத்து யாவர்?
விளக்கம்:
(தீயன: பாவங்களும் நீதியல்லனவும். துணையாம் தன்மையாவது: தமக்கு அவையின்மையும், அரசன்கண் அன்புடைமையும் ஆம். அத்தன்மை உடையார் நெறியின் நீங்க விடாமையின், அவரை ஆளும் அரசர் ஒருவரானும் கெடுக்கப்படார் என்பதாம். 'நெருங்கிச் சொல்லும் அளவினோரை' என்று உரைப்பாரும் உளர். இவை இரண்டு பாட்டானும் அதன் பயன் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) குற்றங் கண்டால் கழறுந் தன்மை யுடையாரைத் தமக்குத் தம் ராகக் கொள்ள வல்லாரைக் கெடுக்குந் தகைமையுடையார் உலகத்து யாவர், (எ-று) இது கேடில்லை யென்றது.