Kural 446
குறள் 446
தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்
thakkaa rinaththanaaith thaanoluka vallaanaich
setrraar seyakkidandhtha thil
Shuddhananda Bharati
To move with worthy friends who knows
Has none to fear from frightful foes.
GU Pope
The king, who knows to live with worthy men allied,
Has nought to fear from any foeman's pride.
There will be nothing left for enemies to do, against him who has the power of acting (so as tosecure) the fellowship of worthy men.
Mu. Varadarajan
தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளவனாய் நடக்கவல்ல ஒருவனுக்கு அவனுடைய பகைவர் செய்யக்கூடிய தீங்கு ஒன்றும் இல்லை.
Parimelalagar
தக்கார் இனத்தனாய்த் தான் ஒழுக வல்லானை - தக்காராகிய இனத்தை உடையவனாய்த் தானும் அறிந்து ஒழுக வல்ல அரசனை; செற்றார் செயக் கிடந்தது இல் - பகைவர் செய்யக் கிடந்ததொரு துன்பமும் இல்லை.
விளக்கம்:
(தக்கார்: அறிவு ஒழுக்கங்களால் தகுதியுடையார். ஒழுகுதல்: அறநீதிகளின் நெறி வழுவாமல் நடத்தல். வஞ்சித்தல், கூடினவரைப் பிரித்தல், வேறு பகை விளைத்தல் என்ற இவற்றானும், வலியானும் பகைவர் செய்யுந் துன்பங்கள் பலதிறத்த ஆயினும், தானும் அறிந்து, அறிவார் சொல்லும் கொண்டொழுகுவான்கண் அவற்றுள் ஒன்றும் வாராது என்பார், 'செற்றார் செயக் கிடந்தது இல்' என்றார்.)
Manakkudavar
(இதன் பொருள்) தகுதியுடையா ரினத்தானாய்த் தானும் அவரோ டொக்க ஒழுக வல்லவனைப் பகைவர் செய்யக் கிடந்ததொரு நெறி. யில்லை,
(என்றவாறு). இஃது இவனைப் பகைவரால் வெல்ல லொண்ணா தென்றது.