குறள் 445

பெரியாரைத் துணைக்கோடல்

சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்

koolvaarkan naaka olukalaan mannavan
koolvaaraik koolndhthu kolal


Shuddhananda Bharati

Gaining great men's help

Ministers are the monarch's eyes
Round him should be the right and wise.


GU Pope

Seeking the Aid of Great Men

The king, since counsellors are monarch's eyes,
Should counsellors select with counsel wise.

As a king must use his ministers as eyes (in managing his kingdom), let him well examine theircharacter and qualifications before he engages them.


Mu. Varadarajan

தக்க வழிகளை ஆராய்ந்து கூறும்‌ அறிஞரையே உலகம்‌ கண்ணாகக்‌ கொண்டு நடத்தலால்‌, மன்னவனும்‌ அத்தகையாரை ஆராய்ந்து நட்புக்‌ கொள்ள வேண்டும்‌.


Parimelalagar

சூழ்வார் கண் ஆக ஒழுகலான் - தன் பாரம் அமைச்சரைக் கண்ணாகக் கொண்டு நடந்தலான்; மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல் - அரசன் அத்தன்மையராய அமைச்சரை ஆராய்ந்து தனக்குத் துணையாகக் கொள்க.
விளக்கம்:
(இரண்டாவது விகாரத்தால் தொக்கது. தானே சூழவல்லானாயினும் அளவிறந்த தொழில்களான் ஆகுலம் எய்தும் அரசன் பாரம் அதுவே தொழிலாய அமைச்சரான் அல்லது இனிது நடவாமை பற்றி, அவரைக் கண்ணாகக் கூறினார். ஆராய்தல் -அமைச்சியலுள் சொல்லப்படும் இலக்கணத்தினர் என்பதனை ஆராய்தல். இவை மூன்று பாட்டானும் பெரியாரைத் துணைகோடலின் சிறப்புக் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) அரசன் தன்னைச் சூழ்ச்சியாற் கொல்ல நினைப்பாரைத் தானுஞ் சூழ்ச்சியாற் கொல்லவல்லவனாதல் ; காரிய மெண்ண வல்லார் தனக்குக் கண்ணாக வொழுகலான்,
(என்றவாறு).