Kural 428
குறள் 428
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்
anjsuva thanjsaamai paethaimai anjsuvathu
anjchal arivaar tholil
Shuddhananda Bharati
Fear the frightful and act wisely
Not to fear the frightful's folly.
GU Pope
Folly meets fearful ills with fearless heart;
To fear where cause of fear exists is wisdom's part.
Not to fear what ought to be feared, is folly; it is the work of the wise to fear what should be feared.
Mu. Varadarajan
அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும்; அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடைவரின் தொழிலாகும்.
Parimelalagar
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை - அஞ்சப்படுவதனை அஞ்சாமை பேதைமையாம்; அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் - அவ்வஞ்சப்படுவதனை அஞ்சுதல் அறிவார் தொழிலாம்.
விளக்கம்:
(பாவமும் பழியும் கேடும் முதலாக அஞ்சப்படுவன பலவாயினும், சாதி பற்றி, 'அஞ்சுவது' என்றார். அஞ்சாமை: எண்ணாது செய்து நிற்றல். அஞ்சுதல்: எண்ணித் தவிர்தல். அது காரியமன்று என்று இகழப்படாது என்பார், 'அறிவார் தொழில்' என்றார். அஞ்சாமை இறைமாட்சியாகச் சொல்லப்பட்டமையின், ஈண்டு அஞ்ச வேண்டும் இடம் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் அதனை உடையாரது இலக்கணம் கூறப்பட்டது.)
Manakkudavar
(இதன் பொருள்) அஞ்சத் தகுவதனை அஞ்சாதொழிதல் ஒருவர்க்கு அறிவின்மை யாதல்; அஞ்சத்தகுவதனை அஞ்சுதல் அறிவுடையார் தொழில், (எ.று). மேல் அஞ்சாமை வேண்டு மென்றாராயினும், ஈண்டு அஞ்ச வேண்டுவன வற்றிற்கு அஞ்சுதல் அறிவென்றார்.