Kural 427
குறள் 427
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்
arivutaiyaar aava tharivaar arivilaar
akhthari kallaa thavar
Shuddhananda Bharati
The wise foresee what is to come
The unwise lack in that wisdom.
GU Pope
The wise discern, the foolish fail to see,
And minds prepare for things about to be.
The wise are those who know beforehand what will happen; those who do not know this are theunwise.
Mu. Varadarajan
அறிவுடையவர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார்; அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர்.
Parimelalagar
அறிவுடையார் ஆவது அறிவார் - அறிவுடையராவார் வரக்கடவதனை முன் அறிய வல்லார்; அறிவிலார் அஃது அறிகல்லாதவர் - அறிவிலராவார் அதனைமுன் அறியமாட்டாதார்.
விளக்கம்:
(முன் அறிதல்: முன்னே எண்ணி அறிதல். அஃது அறிகல்லாமையாவது: வந்தால் அறிதல். இனி, 'ஆவது அறிவார்' என்பதற்குத் 'தமக்கு நன்மையறிவார்' என்று உரைப்பாரும் உளர்.)
Manakkudavar
(இதன் பொருள்) பிற்பயக்குமது அறிவார் அறிவுடையாராவார்; அதனை யறியா தவர் அறிவில்லாதவராவர்,
(என்றவாறு). இது மேற் சொல்லுவன வெல்லாம் தொகுத்துக் கூறிற்று.