குறள் 421

அறிவுடைமை

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்

arivatrrang kaakkung karuvi seruvaarkkum
ullalikka laakaa aran


Shuddhananda Bharati

The possession of knowledge

Wisdom's weapon wards off all woes
It is a fort defying foes.


GU Pope

The Possession of Knowledge

True wisdom wards off woes, A circling fortress high;
Its inner strength man's eager foes Unshaken will defy.

Wisdom is a weapon to ward off destruction; it is an inner fortress which enemies cannot destroy.


Mu. Varadarajan

அறிவு, அழிவு வராமல்‌ காக்கும்‌ கருவியாகும்‌; அன்றியும்‌ பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும்‌ அழிக்க முடியாத உள்ளரணும்‌ ஆகும்‌.


Parimelalagar

அறிவு அற்றம் காக்கும் கருவி - அரசர்க்கு அறிவு என்பது இறுதி வாராமல் காக்கும் கருவியாம்; செறுவார்க்கு அழிக்கலாகா உள் அரணும் - அதுவேயுமன்றிப் பகைவர்க்கும் அழிக்கலாகாத உள்ளரணும் ஆம்.
விளக்கம்:
(காத்தல் - முன் அறிந்து பரிகரித்தல். உள்ளரண் - உள்ளாய அரண்; உள்புக்கு அழிக்கலாகா அரண் என்றும் ஆம். இதனால், அறிவினது சிறப்புக் கூறப்பட்டது.)


Manakkudavar

அறிவுடைமையாவது அறிவாவது இன்னதென்பதும் அதனாலாகிய பயனும் கூறுதல். இது கல்வியும் கேள்வியுமுடையாராயினும் கேட்ட பொருளை யுள்ளவாறு உணர்ந்தறிதல் வேண்டு மாதலான், அதன்பின் கூறப்பட்டது. (இதன் பொருள்) ஒருவனுக்குக் குற்றமறைக்குங் கருவியாவது அறிவு ; பகைவரா லும் உட்புகுந்து அழிக்கலாகா அரணும் அதுதானே,
(என்றவாறு). இது தனக்குள்ள குற்றத்தை மறைக்கு மென்றும், பிறரால் வரும் தீமை யைக் காக்குமென்றும், அறிவினாலாம் பயன் கூறிற்று.