குறள் 42

இல்வாழ்க்கை

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை

thurandhthaarkkum thuvvaa thavarkkum irandhthaarkkum
ilvaalvaan yenpaan thunai


Shuddhananda Bharati

Married Life

His help the monk and retired share,
And celebrate students are his care.


GU Pope

Domestic Life

To anchorites, to indigent, to those who've passed away,
The man for household virtue famed is needful held and stay.

He will be said to flourish in domestic virtue who aids the forsaken, the poor, and the dead.


Mu. Varadarajan

துறந்தவர்க்கும்‌ வறியவர்க்கும்‌ தன்னிடத்தே இறந்தவர்க்கும்‌ இல்லறம்‌ மேற்கொண்டு வாழ்கின்றவன்‌ துணையாவன்.


Parimelalagar

துறந்தார்க்கும்-களைகண் ஆனவரால் துறக்கப்பட்டார்க்கும்; துவ்வாதவர்க்கும்-நல்கூர்ந்தார்க்கும்; இறந்தார்க்கும்-ஒருவரும் இன்றித் தன்பால் வந்து இறந்தார்க்கும்; இல் வாழ்வான் என்பான் துணை-இல்வாழ்வான் என்று சொல்லப்படுவான் துணை.
விளக்கம்:
(துறந்தார்க்குப் பாவம் ஒழிய அவர் களைகணாய் நின்று வேண்டுவன செய்தலானும், துவ்வாதவர்க்கு உணவு முதலிய கொடுத்தலானும், இறந்தார்க்கு நீர்க்கடன் முதலிய செய்து நல்லுலகின்கண் செலுத்தலானும், 'துணை' என்றார். இவை இரண்டு பாட்டானும் இல்நிலை எல்லா உபகாரத்திற்கும் உரித்தாதல் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) வருணத்தினையும் நாமத்தினையுந் துறந்தார்க்கும், துறவாது நல் குரவாளரா யுண்ணப் பெறாதார்க்கும், பிறராய் வந்து செத்தார்க்கும் இல்வாழ்வா னென்று சொல்லப்படுமவன் துணையாவான்,
(என்றவாறு). மேற்கூறிய மூவரும் வருணநாமங்களைத் துறவாமையா லீண்டுத் துறந்தா ரென்று கூறினார். செத்தார்க் கிவன் செய்ய வேண்டியன புறங்காட்டுய்த்தல் முதலாயின. இது மேற்கூறியவர்க்கே யன்றி இவர்க்கும் துணையென்று கூறிற்று.