குறள் 397

கல்வி

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு

yaathaanum naataamaal ooraamaal yennoruvan
saandhthunaiyung kallaatha vaaru


Shuddhananda Bharati

Education

All lands and towns are learner's own
Why not till death learning go on!


GU Pope

Learning

The learned make each land their own, in every city find a home;
Who, till they die; learn nought, along what weary ways they roam!

How is it that any one can remain without learning, even to his death, when (to the learned man)every country is his own (country), and every town his own (town) ?


Mu. Varadarajan

கற்றவனுக்குத்‌ தன்‌ நாடும்‌ ஊரும்போலவே வேறு எதுவாயினும்‌ நாடாகும்‌; ஊராகும்‌; ஆகையால்‌ ஒருவன்‌ சாகும்வரையில்‌ கல்லாமல்‌ காலங்கழிப்பது ஏன்‌?


Parimelalagar

யாதானும் நாடுஆம் ஊர்ஆம் - கற்றவனுக்குத் தன்னோடும் தன்னூருமேயன்றி, யாதானும் ஒரு நாடும் நாடாம்; யாதானும் ஓர் ஊரும் ஊர் ஆம்; ஒருவன் சாம் துணையும் கல்லாதவாறு என் - இங்ஙனமாயின், ஒருவன் தான் இறக்கும் அளவும் கல்லாது கழிகின்றது என் கருதி?
விளக்கம்:
(உயிரோடு சேறலின், 'சாம் துணையும்' என்றார். பிறர் நாடுகளும் ஊர்களும் தம்போல உற்றுப் பொருட்கொடையும் பூசையும் உவந்து செய்தற்கு ஏதுவாகலின் கல்வி போலச் சிறந்தது பிறிதில்லை; அதனையே எப்பொழுதும் செய்க என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) யாதோரிடத்தே செல்லினும் அதுவே தனது நாடும் ஊரும் போலாம்; ஆதலால், ஒருவன் சாந்தனையுங் கல்லாதொழுகுதல் யானைக்கருதி? இது கல்வி எல்லாரானுங் கைக்கொள்ளப்படு மென்றது.