குறள் 369

அவாவறுத்தல்

இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்

inpam itaiyaraa theendum avaavaennum
thunpaththul thunpang ketin


Shuddhananda Bharati

Curbing of desire

Desire, the woe of woes destroy
Joy of joys here you enjoy.


GU Pope

The Extirpation of Desire

When dies away desire, that woe of woes
Ev'n here the soul unceasing rapture knows.

Even while in this body, joy will never depart (from the mind, in which) desire, that sorrow of
sorrows, has been destroyed.


Mu. Varadarajan

அவா என்றுசொல்லப்‌ படுகின்ற துன்பங்களுள்‌ பொல்லாத துன்பம்‌ கெடுமானால்‌ இவ்வுலகிலும்‌ இன்பம்‌ இடையறாமல்‌ வாய்க்கும்‌.


Parimelalagar

அவா என்னும் துன்பத்துள் துன்பம் கெடின் - அவா என்று சொல்லப்படுகின்ற மிக்க துன்பம் ஒருவற்குக் கெடுமாயின்; ஈண்டும் இன்பம் இடையறாது. அவன் வீடு பெற்ற வழியே அன்றி உடம்போடு நின்ற வழியும் இன்பம் இடையறாது.
விளக்கம்:
(துன்பத்துள் துன்பம் - ஏனைத்துன்பங்கள் எல்லாம் இன்பமாக வரும் துன்பம். விளைவின் கண்ணே அன்றித் தோற்றத்தின் கண்ணும் துன்பமாகலின், இவ்வாறு கூறப்பட்டது. காரணத்தைக் காரியமாக உபசரித்து 'அவா' என்றும், 'துன்பத்துள் துன்பம்' என்றும், அது கெட்டார்க்கு மனம் தடுமாறாது நிரம்பி நிற்றலான் 'ஈண்டும் இன்பம் இடையறாது' என்றும் கூறினார். இனி 'ஈண்டும்' என்பதற்குப் 'பெருகும்' என்று உரைப்பாரும் உளர். இதனால் அவா அறுத்தார் வீட்டின்பம் உடம்பொடு நின்றே எய்துவர் என்பது கூறப்பட்டது.)


Manakkudavar

(இ-ள்) அவாவாகிய துன்பங்களுள் மிக்க துன்பம் கெடுமாயின், இன்ப மானது இடையறாமல் வந்து மிகும்,
(என்றவாறு) இஃது இன்பமும் இதனாலே வருமென்றது.