குறள் 367

அவாவறுத்தல்

அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்

avaavinai aatrra aruppin thavaavinai
thaanvaendu maatrraan varum


Shuddhananda Bharati

Curbing of desire

Destroy desire; deliverance
Comes as much as you aspire hence.


GU Pope

The Extirpation of Desire

Who thoroughly rids his life of passion-prompted deed,
Deeds of unfailing worth shall do, which, as he plans, succeed.

If a man thoroughly cut off all desire, the deeds, which confer immortality, will come to him, in the
path in which he seeks them.


Mu. Varadarajan

ஒருவன்‌ ஆசையை முழுதும்‌ ஒழித்தால்‌, அவன்‌ கெடாமல்‌ வாழ்வதற்கு உரிய நல்ல செயல்‌ அவன்‌ விரும்புமாறு வாய்க்கும்‌.


Parimelalagar

அவாவினை ஆற்ற அறுப்பின் - ஒருவன் அவாவினை அஞ்சித்துவரக் கெடுக்க வல்லன் ஆயின்; தவா வினை தான் வேண்டும் ஆற்றான் வரும் - அவனுக்குக் கெடாமைக்கு ஏதுவாகிய வினை, தான் விரும்பும் நெறியானே உண்டாம்.
விளக்கம்:
(கெடாமை - பிறவித் துன்பங்களான் அழியாமை. அதற்கு ஏதுவாகிய வினை என்றது, மேற்சொல்லிய துறவறங்களை.'வினை' சாதி யொருமை, தான் விரும்பும் நெறி மெய்வருந்தா நெறி. 'அவாவினை முற்ற அறுத்தானுக்கு வேறு அறஞ்செய்ய வேண்டா; செய்தன எல்லாம் அறமாம்' என்பது கருத்து. இதனால் அவா அறுத்தற் சிறப்புக் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) ஆசையை மிகவும் போக்குவானாயின், கேடில்லாத வினை தான் வேண்டின நெறியாலே வரும்,
(என்றவாறு).