Kural 365
குறள் 365
அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர்
atrravar yenpaar avaaatrraar matrraiyaar
atrraaka atrrathu ilar
Shuddhananda Bharati
The free are those who desire not
The rest not free in bonds are caught.
GU Pope
Men freed from bonds of strong desire are free;
None other share such perfect liberty.
They are said to be free (from future birth) who are freed from desire; all others (who, whatever else
they may be free from, are not freed from desire) are not thus free.
Mu. Varadarajan
பற்றற்றவர் என்று கூறப்படுவோர் அவா அற்றவரே; அவா அறாத மற்றவர், அவ்வளவாகப் பற்று அற்றவர் அல்லர்.
Parimelalagar
அற்றவர் என்பார் அவா அற்றார் - பிறவியற்றவர் என்று சொல்லப்படுவார் அதற்கு நேரே ஏதுவாகிய அவாஅற்றவர்கள்; மற்றையார் அற்றாக அற்றது இலர் - பிற ஏதுக்களற்று அஃது ஒன்றும் அறாதவர்கள், அவற்றால் சில துன்பங்கள் அற்றதல்லது அவர்போற் பிறவி ஆற்றிலர்.
விளக்கம்:
(இதனால் அவா அறுத்தாரது சிறப்பு விதிமுகத்தானும் எதிர்மறைமுகத்தானும் கூறப்பட்டது.)
Manakkudavar
(இதன் பொருள்) பற்றற்றவரென்பார் ஆசையற்றவரே; ஆசையறாதவர் பற்றினை யறுத்தாராயினும், ஆசையற்றாரைப் போலப் பற்றறுதலிலர்,
(என்றவாறு)