குறள் 364

அவாவறுத்தல்

தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்

thoouimai yenpathu avaavinmai matrrathu
vaaaimai vaenda varum


Shuddhananda Bharati

Curbing of desire

To nothing crave is purity
That is the fruit of verity.


GU Pope

The Extirpation of Desire

Desire's decease as purity men know;
That, too, from yearning search for truth will grow.

Purity (of mind) consists in freedom from desire; and that (freedom from desire) is the fruit of the
love of truth.


Mu. Varadarajan

தூயநிலை என்று கூறப்படுவது அவா இல்லாதிருத்தலே யாகும்‌; அவா அற்ற அத்தன்மை, மெய்ப்‌ பொருளை விரும்புவதால்‌ உண்டாகும்‌.


Parimelalagar

தூஉய்மை என்பது அவா இன்மை - ஒருவர்க்கு வீடு என்று சொல்லப்படுவது அவா இல்லாமை; அது வாஅய்மை வேண்ட வரும் - அவ்வவா இல்லாமைதான் மெய்ம்மையை வேண்டத் தானே உண்டாம்.
விளக்கம்:
(வீடாவது: உயிர் அவிச்சை முதலிய மாசு நீங்குதல் ஆகலின், அதனைத் 'தூய்மை' என்றும், காரணத்தைக் காரியமாக உபசரித்து, 'தூய்மை என்பது அவா இன்மை' என்றும், மெய்ம்மையுடைய பரத்தை ஆகுபெயரால் 'மெய்ம்மை' என்றும் கூறினார். 'மற்று' மேலையதுபோல வினைமாற்றின்கண் வந்தது. வேண்டுதல்-இடைவிடாது பாவித்தல். அவா அறுத்தல், வீட்டிற்கு பரம்பரையான்அன்றி நேரே ஏது என்பதூஉம் அது வரம் வழியும் இதனால் கூறப்பட்டன.)


Manakkudavar

(இதன் பொருள்) ஒருவர்க்கு அழுக்கறுத்தலாவது ஆசையின்மை ; அவ்வாசை யின்மை மெய் சொல்லுதலை விரும்ப வரும்,
(என்றவாறு). இது பொருள்மே லாசையில்லாதார் பொய் கூறாராதலின், மெய் சொல்ல அவாவின்மை வரும் என்று அவாவறுத்தற்குக் கருவி கூறிற்று.