குறள் 356

மெய்யுணர்தல்

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி

katrreendu maeipporul kantaar thalaippaduvar
matrreendu vaaraa naeri


Shuddhananda Bharati

Truth consciousness

Who learn and here the Truth discern
Enter the path of non-return.


GU Pope

Knowledge of the True

Who learn, and here the knowledge of the true obtain,
Shall find the path that hither cometh not again.

They, who in this birth have learned to know the True Being, enter the road which returns not into this world.


Mu. Varadarajan

கற்க வேண்டியவற்றைக்‌ கற்று, இங்கு மெய்ப்‌ பொருளை உணர்ந்தவர்‌; மீண்டும்‌ இப்‌ பிறப்பிற்கு வாராத வழியை அடைவர்‌.


Parimelalagar

ஈண்டுக் கற்று மெய்ப்பொருள் கண்டார் - இம்மக்கட் பிறப்பின் கண்ணே உபதேச மொழிகளை அனுபவம் உடையதேசிகர்பால் கேட்டு அதனான் மெய்ப்பொருளை உணர்ந்தவர்; மற்று ஈண்டு வாரா நெறி தலைப்படுவர் - மீண்டு இப்பிறப்பின்கண் வாராத நெறியை எய்துவர்.
விளக்கம்:
('கற்று' என்றதனால் பலர்பக்கலினும் பலகாலும் பயிறலும், 'ஈண்டு' என்றதனால் வீடுபேற்றிற்குரிய மக்கட்பிறப்பினது பெறுதற்கு அருமையும் பெற்றாம். ஈண்டுவாரா நெறி வீட்டு நெறி. வீட்டிற்கு நிமித்த காரணமாய முதற்பொருளை உணர்தற்கு உபாயம் மூன்று; அவை, கேள்வி, விமரிசம், பாவனை என்பன. அவற்றுள் கேள்வி இதனால் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) இவ்விடத்தே மெய்ப்பொருளை யறிந்து தெளிந்தாரே அடைவார்; மீண்டு இவ்விடத்து வாராத வழியினை,
(என்றவாறு). கல்வி யறிவால் அறிவை அறியப் பிறப்பறு மென்றவாறு.