Kural 349
குறள் 349
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்
patrratrra kannae pirapparukkum matrru
nilaiyaamai kaanap padum
Shuddhananda Bharati
Bondage cut off, rebirth is off
The world then seems instable stuff.
GU Pope
When that which clings falls off, severed is being's tie;
All else will then be seen as instability.
At the moment in which desire has been abandoned, (other) births will be cut off; when that has not been done, instability will be seen.
Mu. Varadarajan
இருவகைப் பற்றும் அற்றபொழுதே அந்நிலை பிறவித் துன்பத்தை ஒழிக்கும்; இல்லையானால் (பிறவித்துன்பம் மாறி மாறி வந்து நிலையாமை காணப்படும்.
Parimelalagar
பற்று அற்ற கண்ணே பிறப்பு அறுக்கும் - ஒருவன் இருவகைப்பற்றும் அற்ற பொழுதே, அப்பற்று அறுதி அவன் பிறப்பை அறுக்கும்; மற்று நிலையாமை காணப்படும் - அவை அறாதபொழுது அவற்றால் பிறந்து இறந்து வருகின்ற நிலையாமைகாணப்படும்.
விளக்கம்:
(காரணமற்ற பொழுதே காரியமும் அற்றதாம் முறைமைபற்றி, 'பற்றற்ற கண்ணே' என்றார். "அற்றது பற்றெனில், உற்றது வீடு" (திருவாய் 1-2-5) என்பதூஉம் அதுபற்றி வந்தது. இவை இரண்டு பாட்டானும் அவ்விருமையும் ஒருங்கு கூறப்பட்டன.
Manakkudavar
(இதன் பொருள்) ஒருவன் யாதொரு பொருளோடும் பற்றற்ற பொழுதே அது பிறப்பையறுக்கும்; அதனை விடாதபோது நிலையாமை காணப்படும்,
(என்றவாறு). இஃது எல்லாப் பற்றினையும் அறுக்கப் பிறப்பு அறுமென்றது.