குறள் 346

துறவு

யான்எனது என்னும்செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்

yaanyenathu yennumserukku aruppaan vaanorkku
uyarndhtha ulakam pukum


Shuddhananda Bharati

Renunciation

Who curbs the pride of I and mine
Gets a world rare for gods to gain.


GU Pope

Renunciation

Who kills conceit that utters 'I' and 'mine',
Shall enter realms above the powers divine.

He who destroys the pride which says "I", "mine" will enter a world which is difficult even to the Gods to attain.


Mu. Varadarajan

உடம்பை யான்‌ எனக்‌ கருதலும்‌ தொடர்பு இல்லாத பொருளை எனது எனக்‌ கருதலுமாகிய மயக்கத்தைப்‌ போக்குகின்றவன்‌, தேவர்க்கும்‌ எட்டாத உயர்ந்த நிலை அடைவான்‌.


Parimelalagar

யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் - தான் அல்லாத உடம்பை 'யான்' என்றும், தன்னோடு இயைபு இல்லாத பொருளை 'எனது' என்றும் கருதி, அவற்றின்கண் பற்றுச் செய்தற்கு ஏதுவாகிய மயக்கத்தைக் கொடுப்பான்; வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும் - வானோர்க்கும் எய்தற்கு அரிய வீட்டுலகத்தை எய்தும்.
விளக்கம்:
(மயக்கம்: அறியாமை. அதனைக் கெடுத்தலாவது, தேசிகர்பால் பெற்ற உறுதிமொழிகளானும் யோகப் பற்சியானும் அவை 'யான், எனது' அன்மை தெளிந்து, அவற்றின்கண் பற்றை விடுதல். சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. இதனான், இவ்விருவகைப் பற்றினையும் விட்டார்க்கே வீடு உளது என்பது கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) யானென்றும் எனதென்றும் நினைக்கின்ற மயக்கத்தை யறுக்கு மவன், தேவர்க்கு மேலாகிய உலகத்தின் கண்ணே செல்லும்,
(என்றவாறு).